ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் தாளவாடி பாரதிபுரம், மெட்டல்வாடி, அருள்வாடி, பனக்கள்ளி, திகனாரை, சிக்கள்ளி, தலமலை, கேர்மாளம், குளியாடா என 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் மானவாரி நிலங்களில் மக்காச்சோளம் பயிர் செய்வது வழக்கம்.
அதேபோல இந்தாண்டும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளவாடி மலைப்பகுதி முழுவதும் மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டது. மூன்று மாத கால பயிரான மக்காச்சோளம் தற்போது ஒரு மாதகால பயிராக உள்ளது.