தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு! - எண்ணெய் குழாய்

ஈரோடு: விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் திட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

விவசாயிகள்

By

Published : Sep 9, 2019, 7:06 PM IST

பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில், கோவை முதல் பெங்களூரு வரை விளைநிலங்கள் வழியாக புதிதாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இத்திட்டத்தால், ஏழு மாவட்டங்களில் சுமார் 4 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படுவர்.

எண்ணெய் குழாய் திட்டத்தை விளைநிலத்தில் அமல்படுத்தினால் தென்னை, கரும்பு, மஞ்சள், மா, கொய்யா, நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி பாதிக்கப்படும். கோழிப்பண்ணை, ஆழ்குழாய் கிணறு, மாட்டு சாலை உள்ளிட்ட எவ்வித கட்டுமான பணிகளும் செய்ய முடியாத நிலை உருவாகும். எனவே இதனை உடனடியாக நிறுத்தவேண்டும் என 100க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இந்த திட்டத்தை விளைநிலத்திற்கு மாற்றாக சாலையோரம் செயல்படுத்த கோரி மனு அளித்தனர்.

விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

இது குறித்து, விவசாயிகள் சங்கம் பொன்னையன் கூறுகையில், ”ஈரோடு மாவட்டத்தில் மட்டும், 532 விவசாயிகள் இதனால் பாதிக்கப்படுவர். அவர்களின் வாழ்வதாரமும் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, 2013ஆம் ஆண்டு இதே வழித்தடத்தில் கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை அமல்படுத்த முயற்சித்தபோது, விவசாயிகளின் எதிர்ப்பால் அப்போதையை, முதலமைச்சர் ஜெயலலிதா இத்திட்டதை நிறுத்தியது போல், தற்போது உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தலையிட்டு இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும்” என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details