ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் மூலமாக 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்களின் அறுவடை நடைபெற்று வருகிறது.
இதனால் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுபுறப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டு, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர்.
நாள்தோறும் ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படும் நிலையில், ஒரு ஏக்கருக்கு 80 சிப்பம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வந்தனர்.
விளைச்சல் அதிகரிப்பு; கொள்முதல் அளவு குறைவு
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக 60 சிப்பம் மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட ஏக்கருக்கு 10 சிப்பம் வரை அதிக விளைச்சல் உள்ளது. விளைச்சல் அதிகரித்து உள்ள நிலையில் கொள்முதல் அளவைக் குறைத்ததால் விவசாயிகள் 10 முதல் 20 சிப்பம் வரை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.