தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கட்சிகள், தொழிலாளர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

anti labor sentiment
farmers protest

By

Published : Oct 1, 2020, 1:03 AM IST

தென்காசி மாவட்டத்தில் உள்ள குளங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதைக் கண்டித்து விவசாயிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று, ஈரோடு காளைமாடு சிலை அருகே, மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, 50-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு, தனியாருக்குச் சாதகமாக திருத்தம் செய்துள்ள மோட்டார் வாகன சட்டம் 288 (A) பிரிவினை திரும்பப்பெற வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும். தனியார் பேருந்தை வாடகைக்கு எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் சார்பில் தமிழக அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டங்களில் நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள், தொழிலாளிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க :நெய்வேலி என்.எல்.சியின் முதலாவது அனல் மின்நிலையம் மூடல்

ABOUT THE AUTHOR

...view details