ஈரோடு:தாளவாடி மலைப்பகுதியில் முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தற்போது தாளவாடி, நெய்தாளபுரம், தலமலை, திகினாரை, மல்லன்குழி, பையனாபுரம், பனஹள்ளி, சூசைபுரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு விளையும் முட்டைகோஸை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். ஒரு ஏக்கர் முட்டைகோஸ் பயிரிட 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில் தற்போது தாளவாடி மலைப் பகுதியில் அறுவடை செய்யப்படும் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி காரணமாக ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.