கொடிவேரி அணையின் உள் பகுதியிலிருந்து அதாவது தடப்பள்ளி பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் வரும் வழியில் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ராட்சத கிணறு அமைக்கும் பணியை குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கியுள்ளது.
இதனால், தட்டப்பள்ளிக்கு வரும் தண்ணீர் வரத்து குறையும், மூன்று தாலுகா பாலை வனமாக, கொடிவேரி அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் எனக்கூறி இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொடிவேரி பாசன விவசாயிகள், மீனவர்கள், கோபிசெட்டிபாளையம் பகுதி பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பெரியார் திடலில் உண்ணாவிரத போராட்டம் செய்ய முடிவெடுத்தனர்.
கவன ஈர்ப்பு போராட்ட காட்சிகள் அதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் தனியார் திருமண மண்டபத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
இதில், பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்துவதால் கொடிவேரி அணைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், கவன ஈர்ப்பு போராட்டத்துடன், உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கொடிவேரி பாசன பகுதிகளான கோபிசெட்டிபாளையம், டி.என்.பாளையம், கூகலூர், கள்ளிப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள், பொதுமக்கள் என 5,000க்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்றனர்.