தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் சாலையில் கொட்டப்பட்ட அவலம்!

தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விரக்தியில் விவசாயிகள் தக்காளியை சாலையில் கொட்டும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை
தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை

By

Published : Jul 28, 2022, 10:12 PM IST

ஈரோடு:தமிழ்நாடு, கர்நாடக எல்லையான தாளவாடியில் தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது தக்காளி வரத்து அதிகமானதால் தக்காளி விலை கிலோ ரூ.3ஆக சரிந்துள்ளது. இதற்கிடையே தக்காளி விலை குறைந்ததால் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பதற்காக டெம்போவில் 1 டன் தக்காளியை விவசாயிகள் கொண்டுசென்றனர்.

பவானிசாகர் கோட்டை கோயில் அருகே தக்காளி நிலவரம் குறித்து விவசாயிகள் விசாரித்தபோது கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வரவில்லை எனத்தெரியவந்தது. இதனால் விரக்தியடைந்த தாளவாடி விவசாயிகள் பாதி வழியிலேயே தக்காளியை பவானிசாகர் கோட்டை கோவில் சாலையோரம் கொட்டிவிட்டு சென்றச் பரிதாப நிலை கண்டு மக்கள் வேதனை அடைந்தனர்.

சாலையில் வீசப்பட்ட தக்காளியைப் பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்.

இதையும் படிங்க:சர்வதேச புலிகள் தினம்: காட்டின் பாதுகாவலனை காத்திடுவோம்..

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details