தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 30, 2020, 5:09 PM IST

ETV Bharat / state

மரவள்ளிக் கிழங்கின் விலை வீழ்ச்சி: வேதனையில் விவசாயிகள்!

ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு அறுவடை தொடங்கியுள்ள நிலையில் கடந்தாண்டைவிட இந்தாண்டு மரவள்ளி விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Breaking News

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியிலுள்ள செண்பகபுதூர், பெரியூர், ஜல்லியூர், நஞ்சப்பகவுண்டன் புதூர், அரியப்பம்பாளையம், கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சத்தியமங்கலம் பகுதியில் மரவள்ளி அறுவடை பணி தொடங்கியுள்ளது.

இதற்கென சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியிலிருந்து மரவள்ளி அறுவடை செய்வதற்கான கூலி தொழிலாளர்கள் முகாமிட்டு அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளையும் மரவள்ளி கிழங்குகளை அறுவடை செய்யப்பட்டு சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களிலுள்ள சேகோ ஆலைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

மரவள்ளிக் கிழங்கு விலை வீழ்ச்சி:

கடந்த ஆண்டு இதே சீசனில் மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்று ஆறாயிரத்து 500 ரூபாய் முதல் ஏழாயிரம் ரூபாய்வரைக்கும் விலை போன நிலையில் இந்தாண்டு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதால் ஒரு டன்னுக்கு இரண்டாயிரம் ரூபாய்வரை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தாண்டு மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்றுக்கு நான்காயிரத்து 500 ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய்வரை மட்டுமே விலை போகிறது.

கடந்தாண்டு ஏக்கருக்கு 15 டன்வரை விளைச்சல் கிடைத்த நிலையில் இந்தாண்டு 12 டன்வரை மட்டுமே விளைச்சல் கிடைத்துள்ளதால் இந்த ஆண்டு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என மரவள்ளி பயிரிட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இம்முறையாவது உரிய இழப்பீட்டை வழங்க மத்திய குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details