ஈரோடு மாவட்டம்சத்தியமங்கலம், பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் செண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்ட பூக்கள் உள்ளூர் மட்டுமின்றி கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த மாதம் சுபமுகூர்த்த நாட்களில் கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது.
இந்த மாதம் சுபமுகூர்த்த நாட்கள் இல்லாததால் செண்டுமல்லிக்கு உரிய விலை கிடைக்கவில்லை. உற்பத்தி செலவை கூட ஈடுகட்ட முடியாத விலைக்கு செண்டுமல்லி விற்பனையாவதால், பூக்களை பறிக்காமலேயே விவசாயிகள் விட்டனர். ஒரு கிலோ பூக்களை பறிக்க கூலி ரூ.10ஆக இருக்கும் போது அதன் விலையும் ரூ.10ஆக இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.