தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி மோதி சம்பவ இடத்தில் விவசாயி உயிரிழப்பு - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: வீட்டிற்கு சென்று கொண்டிருந்த விவசாய கூலி தொழிலாளி மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

farmer died in truck collision
farmer died in truck collision

By

Published : Dec 26, 2020, 10:34 PM IST

சத்தியமங்கலத்தில் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள ஏரப்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி கனகராஜ் (37). இவர் தனது இருசக்கர வாகனத்தில் புங்கம்பள்ளி வந்து விட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பி சென்றுள்ளார்.

அப்போது குப்பந்துரை ரோடு பள்ளத்து கருப்பராயன் கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பி ஓடிய லாரி டிரைவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த கனகராஜிக்கு ருக்குமணி என்ற மனைவியும் தனுஸ்ரீ (13), கிருத்திக் (12) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.

இதையும் படிங்க: 2000 டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பிவைப்பு

ABOUT THE AUTHOR

...view details