ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சின்னார்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரி (56). இவருடைய மக்காச்சோள தோட்டத்தில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததுள்ளன. இதனால், நேற்று (ஜன.02) இரவு தோட்டத்திற்கு காவல் பணிக்கு சென்ற மாரி, யானைகளை துரத்தும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது யானை அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கடம்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.