ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (55), விவசாயம் செய்து வருகிறார். இவர் புஞ்சை புளியம்பட்டி பவானிசாகர் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் செல்வதற்காக, தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவர் சாலையைக் கடக்க முயன்றபோது புஞ்சை புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த நீர் ஏற்றிய வாகனம், பழனிசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
வாகன விபத்து தொடர்பான காணொலி இதில் பழனிசாமி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். சம்பவ இடத்தில் நின்றிருந்த பொதுமக்கள், உடனடியாக பழனிசாமியை மீட்டு சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
விபத்து குறித்து புஞ்சை புளியம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ஓடும் காரில் பற்றிய தீ - ஓட்டுநர் உயிரிழப்பு