சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூரை அடுத்த குரும்பூரைச் சேர்ந்தவர் பெள்ளி கள்ளப்பா (65). இவர் வனத்தில் ஆடு, மாடு மேய்த்துவருகிறார்.
குரும்பூரில் யானை தாக்கி விவசாயி படுகாயம் - Erode district news
ஈரோடு மாவட்டம் குரும்பூரில் ஆடு மேய்க்கச் சென்ற விவசாயியை யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
![குரும்பூரில் யானை தாக்கி விவசாயி படுகாயம் Farmer injured by elephant attack in Kurumbur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:49:21:1624627161-tn-erd-03-sathy-elephant-attack-photo-tn10009-25062021165401-2506f-1624620241-542.jpg)
Farmer injured by elephant attack in Kurumbur
இந்நிலையில் வீட்டில் இருந்து அருகியம் வனப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். அப்போது புதர் மறைவில் இருந்த காட்டு யானை பிளிறியதால் ஆடு, மாடுகள் மிரட்சியில் ஓடின.
அப்போது யானையைப் பார்த்து் கள்ளப்பா ஓடும்போது அது துரத்திவந்து தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து கடம்பூர் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.