ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இங்கு யானைகள் சாலையோரம் முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்நிலையில், கடம்பூர் மலை பகுதி ஏலஞ்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி(44) என்பவர் தனது நண்பருடன் குன்றி மலை கிராமத்திற்கு செல்வதற்காக இருசக்கர வானத்தில் வனச்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அஞ்சனை பிரிவு அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதி அருகே சென்ற போது, புதர் மறைவில் மறைந்திருந்த காட்டு யானை திடீரென சாலைக்கு வந்தது. இரவு நேரத்தில் திடீரென யானை சாலைக்கு வந்ததால் அச்சமடைந்த விவசாயி பழனிசாமி, செய்வதறியாமல் திகைத்த நிலையில் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.