தமிழ்நாடு

tamil nadu

ஊடு பயிராக கஞ்சா விவசாயம் - இளைஞர் கைது

By

Published : Dec 1, 2022, 4:40 PM IST

கடம்பூர் மலைப்பகுதியில் மக்காசோள பயிரில் ஊடுபயிராக கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது செய்த போலிசார் அவரிடம் 40 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்தனர்

சட்ட விரோதமாக கஞ்சா செடி பயிரிட்ட விவசாயி கைது
சட்ட விரோதமாக கஞ்சா செடி பயிரிட்ட விவசாயி கைது

ஈரோடு: சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கூட்டார்தொட்டி கிராமத்தில் சட்ட விரோதமாக கஞ்சா பயிரிடப்படுவதாக கடம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடம்பூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்பகுதியில் உள்ள விவசாயி பழனிச்சாமி என்பவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள மக்காசோளம் பயிரிட்டுள்ள விளை நிலத்தில் ஊடுபயிராக கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டதை கண்டறிந்த போலீசார் அப்பகுதியில் இருந்த 40 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து சட்ட விரோதமாக கஞ்சா பயிரிட்ட விவசாயி பழனிச்சாமியை கடம்பூர் போலீசார் கைது செய்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய மின்வாரிய என்ஜினியர்.. 14 ஆண்டுக்குப் பின் மனைவிக்கும் சிறை தண்டனை!

ABOUT THE AUTHOR

...view details