ஈரோடு மாவட்டம் ஆசனூர் புலிகள் காப்பகம், அருகே உள்ள ஒரத்தி கிராமத்தில் கஞ்சா செடி பயிரிடுவதாக ஆசனூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ஆசனூர் காவல் துறையினர் மாறுவேடத்தில் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.
மக்காச்சோள காட்டில் கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது - ஈரோடு மாவட்ட செய்திகள்
ஈரோடு: மக்காச்சோள காட்டில் கஞ்சா பயிரிட்ட விவசாயி குருசாமியை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஈரோட்டில் மக்காச்சோளக்காட்டில் கஞ்சா சாகுபடி செய்த விவசாயி கைது
அப்போது மக்காச்சோள காட்டில் கஞ்சா செடி வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவை பயிரிட்ட விவசாயி குருசாமியை காவல் துறையினர் கைது செய்து, 5 கிலோ எடை கொண்ட கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.