ஈரோடு:கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ராஜசேகர். இவர், தனது மனைவி ஸ்ரீ வள்ளி, மகள் ஸ்ரீநிதி ஆகியோருடன் இன்று கோவையில் இருந்து காரில் சத்தியமங்கலம் அடுத்த கே.என். பாளையம் சென்றார். அங்குள்ள சித்த வைத்தியரை பார்த்துவிட்டு அவர்கள் மீண்டும் காரில் சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். சத்தியமங்கலம் அத்தாணி சாலை அரசு மருத்துவமனை அருகே கார் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி, அங்குள்ள பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது.
அப்போது காரில் இருந்த பாதுகாப்பு ஏர் பலூன் உடைந்து வெளியேறியதால் காரில் இருந்த ராஜசேகர் உள்ளிட்ட 3 பேர் லேசான காயத்துடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.