ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கலிங்கியம் பாரதி நகரில் யு4 கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை சிறப்பு பொதுக்குழு மற்றும் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் இன்று (நவம்பர் 22) நடைபெற்றது.
'சாகுபடி நிலங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை குத்தகை மாற்ற வேண்டும்'
ஈரோடு: பொதுப்பணித்துறை சாகுபடி நிலங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை குத்தகை மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் கீழ்பவானி வாய்க்கால் யு4 பாசன சபைக்குட்பட்ட பிரதான வாய்க்கால் மைல் 29/7 முதல் மைல் 33/0 வரையிலான பகுதிகளில் உள்ள அனைத்து மதகுகள், பிரிவு கிளை, உபகிளை வாய்க்கால்கள் அமைத்தல், முறையான மதகுகள், பாசனப்பரப்பு, குழாய் அளவு போன்ற விவரங்கள் எழுத வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.
மேலும், பொதுப்பணித்துறை நிலங்களுக்கு விவசாயிகள் சாகுபடி செய்யும் பகுதிகளுக்கு ஆண்டுதோறும் 10 சத குத்தகை உயர்த்தி எழுதுவதை ரத்து செய்யவும் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும், கீழ்பவானி பாசன திட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் கொப்பு வாய்க்கால்கள் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் சேதமடைந்து கடைமடை பகுதி வரை நீர் செல்லாமல் 10 முதல் 25 வரையிலான பாசப்பகுதி நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே கொப்பு வாய்க்கால்கள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
TAGGED:
விவசாய நிலங்கள் குத்தகை