ஈரோடு: பேருந்து நிலையத்திலிருந்து கருங்கல்பாளையம் செல்லும் வழியான திருநகர் காலனி பகுதியில் ஏராளமான மின்கம்பங்கள் உள்ளன.
இந்நிலையில், நேற்று (ஜுலை 03) மாலையில் திருநகர் காலனி பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் மழை பெய்தது.

இதனையடுத்து இன்று (ஜுலை 04) திருநகர் காலனி பகுதியில் ஒரு கம்பம் விழவே, அதனைத் தொடர்ந்து ஐந்து கம்பங்களும் அடுத்தடுத்து சரிந்து கீழே விழுந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின் வாரிய பணியாளர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அப்பகுதி முழுவதும் தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்தை துண்டித்தனர். இந்தப் பகுதியில் இன்று போக்குவரத்து இன்றி இருந்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.