தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகள் மாநாடு - தீர்மானங்கள் நிறைவேற்றம் - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

ஈரோடு: விவசாயிகள் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாயிகள் கோரிக்கை மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
விவசாயிகள் கோரிக்கை மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

By

Published : Feb 20, 2021, 10:52 PM IST

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அப்போது பேசிய விவசாயிகள், "நான்குவழிச் சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. தற்போது விவசாய நிலங்களை அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் அனுமதியின்றி அமைக்கப்படும் அளவீட்டு கற்களை அகற்றுவோம் என தெரிவித்தனர்.

கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கு சந்தை மதிப்வை விட இருமடங்கு தொகை வழங்க வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படடது போல தேசிய வங்கியில் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் வரை கள் இறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். என்றும் விவசாயிகள் குறிப்பிட்டனர்.

இதையும் படிங்க: ஆரம்பம் முதல் ஆய்வுக் கல்வி வரை அனைத்தையும் இலவசமாக்குக - சிபிஐ மாநாட்டில் தீர்மானம்

ABOUT THE AUTHOR

...view details