தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பில் தீர்மானங்கள் நிறைவேற்றம்! - விசைத்தறி சங்கங்கள் கூட்டமைப்பு

ஈரோடு : தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு, ஐந்து முக்கியத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

merchants
merchants

By

Published : Aug 31, 2020, 9:55 PM IST

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 45க்கும் மேற்பட்ட விசைத்தறி சங்கங்கள் ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வகையில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஈரோட்டில் நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் முக்கியமான ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சுரேஷ் கூறியதாவது, "மத்திய அரசின் மின்சார சீர்திருத்தச் சட்டத்தில் விலையில்லா மின்சாரம் வழங்கப்படுவதில் திருத்தம் மேற்கொள்வது குறித்து, பயன்பெறுபவர்களிடம் கருத்துக் கேட்டு முடிவெடுக்க வேண்டும். கைத்தறிக்கு ரகம் ஒதுக்கியதுபோன்று, விசைத்தறிக்கும் ரகம் ஒதுக்கிட வேண்டும்.

விசைத்தறி சங்கங்கள் கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் சுமார் 65 கோடி ரூபாய் கடன்பெற்று கடனைத் திரும்ப செலுத்த முடியாத விசைத்தறியாளர்களுக்கு தள்ளுபடி வழங்கிட வேண்டும், விசைத்தறித் தொழிலின் மூலப்பொருளான நூல் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும், கட்டுப்பாடில்லாத விலை, அதன் ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்தி நூலுக்கு நிலையான விலையை நிர்ணயம் செய்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:பிராணாப் முகர்ஜி மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details