தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாய்ப்பாலுக்கும் ஜிஎஸ்டி போடுவார்கள்: ஈவிகேஎஸ் இளங்கோவன் - தாய்ப்பாலுக்கும் ஜிஎஸ்டி போடுவார்கள்

இன்னும் சில நாட்களில் தாய்ப்பாலுக்கும் ஜிஎஸ்டி போடுவார்கள் என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.

பாராட்டு விழா
பாராட்டு விழா

By

Published : Aug 11, 2022, 8:15 PM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூரில் மூத்த காங்கிரஸ் தலைவர் காமராஜ் கல்வி அறக்கட்டளை நிறுவனர் என்.கே கருப்புசாமிக்கு பாராட்டு விழா தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திராவிடக் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மத்திய முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளிடையே சிறப்புறையாற்றினர்.

இந்த பாராட்டு விழாவில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள், காங்கிரஸ், திக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கழகத்தின் தலைவர் கி.வீரமணி, மாணவர்கள் மத்தியிலேயே ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சனை, போதை பொருள். இது நம்முடைய எதிர்காலத்தில் மாணவர்களின் வாழ்வை பாதிக்ககூடியது.

பாராட்டு விழா

ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் கவனமாக தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். தீய சக்திகள் பள்ளிக்கூட வளாகங்களிலே வளராமல் ஊடுருவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காவல்துறை மற்றும் பள்ளிகளுக்கு மட்டும் பொறுப்பல்ல. ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு பொது நல அமைப்புகளும் தங்களுடைய பணியை மிக வேகமாக செய்ய வேண்டும்.

பீகாரில் நிதீஷ் குமார் தலைமையில் முதலமைச்சராகவும் அதேபோல ராஷ்ட்ரிய ஜனதா சார்பில் தேஜஸ்வி துணை முதலமைச்சர் ஆகியிருப்பது மிகப்பெரிய அரசியல் திருப்பமாக கருதப்படுகிறது என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், பாஜக தலைவர் அண்ணாமலை சட்டத்தை மீறுகின்றார். காவல்துறையினர் சொல்வதைக் கேட்பது கிடையாது. சில தினங்களுக்கு முன்பு ஈரோட்டிலே ஊர்வலமாக போகக்கூடாது என்று காவல்துறையினர் சொன்ன போது கூட சட்டத்தை மீறி அவர் சென்றிருக்கின்றார். ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு இது அழகா என்பதை கேட்க விரும்புகின்றேன். பால், நெய், தயிர் மீதும் பாஜகவினர் ஜிஎஸ்டி வரி போட்டு உள்ளனர். தாய்ப்பாலுக்கு கூட ஜிஎஸ்டி போட்டு விடுவார்கள் என்றார்.

இதையும் படிங்க:Exclusive: "மூங்கில் குச்சிகளை வைத்து பயிற்சி செய்தேன்"... இந்திய வீராங்கனை அன்னு ராணி உருக்கம்...

ABOUT THE AUTHOR

...view details