தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யோகாவில் சாதனைப் படைத்த 4 வயது சிறுமி - சிறுமி சாதூர்யா

ஈரோடு : பவானியில் நடைபெற்ற யோகா போட்டியில் கலந்துகொண்ட நான்கு வயது சிறுமி, பல்வேறு யோகாசனங்களை செய்து சாதனைப் படைத்தார்.

ஈரோடு

By

Published : Apr 17, 2019, 6:31 PM IST

ஈரோடு மாவட்டம் பவானியில் தனியார் யோகா மையம் சார்பாக யோகா போட்டிகள் நடைபெற்றது. இதில் நான்கு வயது சிறுமி சாதூர்யா கலந்து கொண்டு போட்டிகளை பார்க்க வந்தோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இவர் கிருஷ்ணாசனம், ஹாலாசனம், விருச்சியாகசனம் போன்ற பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினார். இந்நிலையில், இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ரெக்கார்ட் நிறுவனத்தின் இயக்குநர் அரவிந்தன், சிறுமி சாதூர்யாவிற்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கெளரவித்தார்.

4வயது சிறுமி யோகாவில் சாதனை

இதனையடுத்து சிறுமி சாதூர்யாவுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும், யோகாவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டு சிறுமியை பாராட்டினர்.

ABOUT THE AUTHOR

...view details