ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் உள்ளன.
கைத்தறி நெசவாளர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் சுயஉதவிக்குழு போன்று தனிக்குழுவாகச் சேர்ந்து மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். ஒருவருக்கொருவர் பிணை போட்டுள்ளனர். ஒருவர் கட்டவில்லை என்றாலும் அந்தக் குழுவில் உள்ள பெண்கள் பொறுப்பேற்க வேண்டும்.
இந்தக் கடன் தொகையை வாரம் ஒருமுறை, வட்டியுடன் கட்டி வந்தனர். கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையில், தற்போது ஊடரங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால், வறுமையில் வாடும் நெசவாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.