தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பொதுமக்கள் பீதி! - ஈரோடு அந்தியூர் செய்திகள்

ஈரோடு: அந்தியூர் அருகே நல்லாகவுண்டன் கொட்டாய் பகுதியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை புலியால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

புலி வருதுடோய்..ஊருக்குள் புகுந்த சிறுத்தை புலியால் பொதுமக்கள் பீதி!
புலி வருதுடோய்..ஊருக்குள் புகுந்த சிறுத்தை புலியால் பொதுமக்கள் பீதி!

By

Published : Feb 21, 2021, 12:05 PM IST

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்தில் யானை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கும் நிலையில், சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சாலைகளின் ஓரங்களில் அவ்வபோது தென்படும் சிறுத்தை புலி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வனத்தை ஒட்டிய ஊருக்குள் நுழைந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள நல்லாகவுண்டன் கொட்டாய் பகுதியில், இரண்டு நாட்களுக்கு முன்பு சுமார் இரவு 9 மணி அளவில், வழக்கத்தை விட நாய்கள் அதிக அளவில் குரைத்துள்ளது. நாய் குரைக்கும் சத்தத்தைக் கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் திவாகர் (21), வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்.‌ அப்போது, நாய்கள் துரத்தியதில், சுமார் 3 மீட்டர் இடைவெளியில், மின்னல் வேகத்தில், சிறுத்தை புலி ரோட்டை நான்கு கால் பாய்ச்சலில் கடந்தது. இதைப் பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்த திவாகர்.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் கால்நடை மருத்துவர் அர்ஜுனன் என்பவரது வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் சிறுத்தை புலி ரோட்டைக் கடக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

மேலும், இதுவரை காட்டிலிருந்த சிறுத்தை புலி, முதன்முறையாக ஊருக்குள் நுழைந்திருப்பது ஊர் பொதுமக்களிடையேயும், அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடையையேயும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை புலியின் நடமாட்டத்தை கண்காணித்து அசம்பாவிதம் ஏற்படும் முன், கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க...பரிசோதனைக்காக பாதுகாக்கப்படும் உன்னாவ் சிறுமிகளின் உறுப்புகள்

ABOUT THE AUTHOR

...view details