ஈரோடு:ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட மஞ்சள் வேகவைக்கபட்டு, நன்கு வெயிலில் உலர்த்தி, அரவைக்கு தயாரான பதத்தில் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.
அந்தவகையில், நேற்றைய (ஏப்ரல் 20) நிலவரப்படி
விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 419-க்கும் அதிகபட்சமாக ரூ. 8ஆயிரத்து 589 வரை ஏலம் விடப்பட்டது. கிழங்கு மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்து 559க்கும் அதிகபட்சமாக ரூ. 7 ஆயிரத்து 315 வரை ஏலம் எடுக்கப்பட்டது.