ஈரோடு அருகேயுள்ள சாஸ்திரி வீதிப்பகுதியைச் சேர்ந்த குமரன் நகர் பகுதியில் நாள்தோறும் கூலி வேலைக்குச் சென்று தங்களது வாழ்வாதாரத்தை நடத்திவரும் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.
கரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கையாக தற்போது தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வருவாயின்றி தவித்துவருகின்றனர்.
அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் அத்தியாவசிய பொருள்களை அவ்வப்போது வழங்கிவருவதாலும், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்களைக் கொண்டும் அப்பகுதி மக்கள் தங்களது தினசரித் தேவையை ஓரளவு பூர்த்தி செய்துகொள்கின்றனர்.
தனது சொந்த செலவில் மக்களுக்கு உதவிய திருநங்கை இந்நிலையில் அதே பகுதியில் வசித்துவரும் திருநங்கை சுப்புலட்சுமி (50) தனது சொந்த செலவில் தான் வசித்துவரும் பகுதி மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கியுள்ளார்.
தான் வசிக்கும் பகுதி மக்கள் அன்றாடத் தேவைகள் பூர்த்தியாகாமல் தவித்துவருவதைக் கண்டு மனம் வாடிய சுப்புலட்சுமி, ஒரு வாரத்திற்குத் தேவையான பொருள்களை மக்களுக்கு வழங்கியுள்ளார்.
திருநங்கை சுப்புலட்சுமியின் இந்தச் சேவை மனப்பான்மையை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:திருநங்கைகள் நடத்திய கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி!