தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்நிலையில், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தொடர்பான முடிவினை விமர்சனம் செய்ததோடு, தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸில் எப்போது வேண்டும் என்றாலும் இணையலாம், அதற்காக சத்தியமூர்த்தி பவன் எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி உருவபொம்மை எரிப்பு! - Congress
ஈரோடு: ஜி.கே.வாசன் மீது காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி வைத்த விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்ட விவகாரம் ஈரோட்டில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உருவ பொம்மை எரிப்பு
இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஈரோடு மத்திய மாவட்ட தமாகா இளைஞரணித் தலைவர் ரமேஷ் தலைமையில், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரியின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவரது உருவபொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.