ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை 2 ஆயிரத்துக்கு 500க்கும் மேற்பட்ட காவலர்கள் தங்களது பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் ஈரோடு தெற்கு காவல்நிலையத்தில் காவலராக பணிபுரியும் மாதேஷ் என்பவர் கரோனா பணியில் ஈடுபட்டுவந்தார்.
அப்போது அவரது மனைவி சவிதாமணி, பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு சில தொகைகளை கட்ட மருத்துவமனை கூறியுள்ளது. இதனையடுத்து கரோனா பாதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு உள்ளதால் மருத்துவமனைக்கு தேவையான தொகையை வெளியில் எங்கு கேட்டும் கிடைக்காததால் காவலர் மாதேஷ் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷை சந்தித்து தனது சூழ்நிலையை விளக்கினார்.
காவலரின் நிலைமையை புரிந்து கொண்ட சக்தி கணேஷ், அந்த மருத்துவமனையை தொடர்பு கொண்டு காவலர் மாதேஷின் மனைவிக்கு பிரசவம் பாருங்கள் என்றும் அதற்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டுமோ அதனை அவரே செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.