தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறைக்குப் பின் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், தனியார் பள்ளிகளின் வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு தரச்சான்று வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஆய்வில் ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம் ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 192 தனியார் பள்ளிகளின் 1,538 வாகனங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளது.
பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு - school van
ஈரோடு: வரும் கல்வியாண்டில் பயன்படுத்தப்பட உள்ள பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு அடுத்துள்ள பவளாத்தாம்பாளையத்தில் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆய்வு பணியை மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். தனியார் பள்ளி வாகனங்களில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் வெளியேறுவதற்கான அவசர வழி உள்ளதா? ஓட்டுநர் உரிமம், முதல் உதவிப்பெட்டி, தீ அணைப்பு கருவி போன்றவை இருக்கிறதா? உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்த அதிகாரிகள், வாகன ஓட்டுநர்கள் மது அருந்தியபடியும், புகைபிடித்தபடியும் வாகனங்களை இயக்கக்கூடாது, மாணவர்களை வாகனத்தில் ஏற்றும்போதும், இறக்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளையும் வழங்கினர்.