ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(50). கூலி தொழிலாளி. இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.
இவரது வீட்டின் அருகே சோளத்தட்டுப்போர் வைத்து பாதுகாத்து வந்தார். இந்நிலையில் இன்று(ஏப்.8) சோளத்தட்டு போரில் திடீரென தீப்பிடித்து. அப்போது வேகமாக காற்று வீசியதால் தீ மளமளவென போர் முழுவதும் பரவியது.
கிராம மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்படுத்தி அணைக்கத் தொடங்கினர். இதற்கிடையே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சோளத்தட்டு போர் முழுவதும் எரிந்து நாசம் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பாக சோளத்தட்டுப்போர் முழுவதும் எரிந்து நாசமாகிது. இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கோடை கால தீ விபத்துகளை தடுக்க தன்னார்வலர்களுக்கு பயிற்சி!