கடந்த சில வருடங்களாக இயற்கை பேரிடர் தமிழ்நாட்டை அதிகமாகவே தாக்கிவருகிறது. குறிப்பாக, தலைநகரான சென்னையை பருவமழை காலங்களில் தொடர்ச்சியாகவே இயற்கை பேரிடர் தாக்கி வருகின்றது.
அதுபோன்ற பேரிடர் காலங்களில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்பதில் பெரும் போராட்டத்தை சந்திக்கும் நிலையில், அவர்களின் மீட்பு பணியை எளிதாக்கும் வகையில் ஒரு புதிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி மாணவர்கள்.
இந்த இயந்திரம் முழுவதும் பிவிசி பைப்புகளைக் கொண்டு, நீர் புகாதவண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐந்து கிலோ எடைகொண்ட இந்த இயந்திரத்தில் ஜிபிஎஸ்ஸூம் பொருத்தப்பட்டுள்ளது. இயந்திரம் சுமார் 80 கிலோ எடையுள்ளவர்களை இழுக்கும் திறன் கொண்டது. அதுமட்டுமின்றி இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து 5 மணி நேரம் செயல்பட்டு நீரில் மூழ்கிய வரை காப்பாற்றும் திறன் கொண்டது.