ஈரோடு:2017ஆம் ஆண்டு வரை ஈரோடு மாவட்டத்தில் மணல் தொழில் மிகவும் லாபகரமாக இருந்துவந்தது. 2017-க்குப் பிறகு மணல் விற்பனை ஆன்லைன் மூலம் நடைபெற்றது. ஆனால் அந்த விற்பனை படுதோல்வி அடைந்தது. மணல் தட்டுப்பாடும் அதிகளவில் காணப்பட்டது.
பின்னர் ஒரு யூனிட் மணல் 3,500 ரூபாயிலிருந்து ஒன்பதாயிரம் ரூபாய் வரை விற்பனையானது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மணல் குவாரிகள் மூடப்பட்டு தொழிலே முடங்கிப் போயுள்ளது.
தற்போது இந்தத் தொழில் முடங்கிப்போயுள்ள நிலையில் அதனை நம்பியே இருக்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்கொலை செய்யும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.