தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நிறைவு விழா- ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பு - Erode

ஈரோடு: செங்கோடபாளையத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமின் நிறைவு நாள் விழாவில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நிறைவு விழா

By

Published : May 17, 2019, 7:57 AM IST


ஈரோடு மாவட்டம், செங்கோடபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி வகுப்பு கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கி 20 நாட்கள் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன்பகவத் கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு அமைப்பின் முக்கியத்துவம் மற்றும் கடந்து வந்த பாதைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா

முகாமின் நிறைவு நாளான நேற்று ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் யோகா, காரத்தே, சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைகளை செய்து காட்டினர். இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

ABOUT THE AUTHOR

...view details