தமிழ்நாடு

tamil nadu

ஈரோட்டில் ஒரே நாளில் 7 பேருக்கு கரோனா நோய்த்தொற்று!

By

Published : Jun 21, 2020, 11:18 PM IST

ஈரோடு: இரண்டு வயது குழந்தை உள்பட ஏழு பேருக்கு இன்று (ஜூன் 21) ஒரே நாளில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

hospital
hospital

ஈரோடு மாவட்டத்தில், கடந்த 80 நாட்களுக்கும் மேலாக கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இல்லாத நிலையில், கடந்த நான்கு நாட்களாக கரோனா தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டு, பெருந்துறை கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருவதால், மாவட்டம் முழுவதும் மீண்டும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று(ஜூன் 21) ஒரே நாளில் ஏழு நபர்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், குருவரெட்டியூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, 14 வயது பெண் குழந்தை ஆகியோர் குஜராத் மாநிலத்திற்குச் சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையில் தங்கியிருந்து விட்டு காரில் பவானி திரும்பியுள்ளனர். இந்நிலையில் மூவரும் அருகேயுள்ள சோதனை மையத்தில் பரிசோதனை மேற்கொண்டதில் மூவருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனை
இதேபோல் ஈரோடு வளையக்கார வீதிப்பகுதியில் இன்றும் 42 வயது பெண்ணொருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஈரோடு சம்பத் நகர் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர், இரண்டு வயது குழந்தையுடன் கரூர், புதுக்கோட்டை ஆகியப் பகுதிகளுக்கு கரோனா தீநுண்மி நோயிலிருந்து விடுபட்டவர்களுடன் பயணம் செய்ததில், அந்த குழந்தைக்கு தற்போது நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் சித்தோட்டைச் சேர்ந்த 26 வயது இளைஞர், நாள்தோறும் திருப்பூருக்குச் சென்று வந்த நிலையில் மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த அரசு மருத்துவமனை பிணவறை வாகன ஓட்டுநரான 40 வயதுடையவர், கடந்த சில நாட்களாக ஈரோட்டிற்கு மருத்துவமனைப் பொருட்களைக் கொடுக்க, சென்னையிலிருந்து வந்தவர்களுடன் பழகி வந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details