தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு ரயில் நிலையம் மறுசீராய்வு குறித்து ரயில்வே மேலாளர் ஆய்வு - railway station inspection by salem railway manager

ஈரோடு: ரயில் நிலையம் மறுசீராய்வு குறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுப்பாராவ், ரயில் நிலைய அலுவலர்களுடன் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார்.

erode railway station inspection by railway manager
erode railway station inspection by railway manager

By

Published : Dec 18, 2019, 9:41 AM IST

தென்னக ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் ரயில் நிலையங்களின் தூய்மை, பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காகப் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஈரோடு ரயில் நிலையத்தில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுப்பாராவ் ரயில்வே துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆண்டு தோறும் நடைபெறவுள்ள ரயில் நிலையம் மறுசீரமைப்பு குறித்து ஆய்வு செய்த சுப்பாராவ், முன்னதாக ஈரோடு ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் லிப்ட், எஸ்கலேட்டர் பணிகளையும் ஆய்வு செய்தார்.

ரயில்வே மேலாளர் ஆய்வு

மேலும் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ், கேமரா பணிகள் குறித்து ஆய்வு செய்த சுப்பாராவ் இந்த மாத இறுதிக்குள் ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் லிப்ட் எஸ்கலேட்டேர் பணிகள் முடிவு பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details