ஈரோடு:தமிழ்நாடு முழுவதும் தற்போது 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அதேநேரம் மாவட்டம் முழுவதும் 10ஆம் வகுப்பு தனித்தேர்வு எழுதுபவர்களுக்காக 3 மையங்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஈரோடு கொள்ளம்பாளையம் ரயில்வே காலனி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான செயல்முறைத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இந்தப் பள்ளியில் சுமார் 70க்கும் மேற்பட்ட தனித்தேர்வர்கள் மாவட்டம் முழுவதும் இருந்து பங்கேற்று வருகின்றனர்.
இதில் ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், 10ஆம் வகுப்பு செயல்முறைத் தேர்வு அன்று குடும்பச்சூழ்நிலை காரணமாக தேர்வில் பங்கேற்கவில்லை. இதனால் மணிகண்டனை பள்ளியில் இருந்து தொடர்பு கொண்ட பெண் ஆசிரியர் ஒருவர், செயல்முறைத் தேர்வுக்கு வரும்போது ரெக்கார்டு நோட்டை எடுத்து வருவதுடன், தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு வர வேண்டும் என்றும் கூறி உள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் இன்று (மார்ச் 23) காலை ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளிக்கு வந்த தனித்தேர்வர் மணிகண்டன், பொருளாதார சூழ்நிலை காரணமாக பேப்பர் பண்டல் வாங்கி வர முடியவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு ‘'முடியாது, பேப்பர் பண்டலுடன் வா. இல்லை என்றால் வெளியே போ” என்று தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். இதனையடுத்து நண்பர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மணிகண்டன் பள்ளிக்குச் சென்றுள்ளார்.
இதனிடையே இது குறித்த தகவல் அறிந்து பள்ளிக்குச் சென்ற செய்தியாளர்களின் ஒளிப்பதிவு சாதனத்தை, அப்பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது செய்தியாளர்கள், ‘நீங்கள் பேப்பர் பண்டலை லஞ்சமாக கேட்டதற்கான ரெக்கார்டு இருக்கிறது’ எனக் கூறியுள்ளனர். அதற்கு பதிலளித்துப் பேசிய தலைமை ஆசிரியை தேன்மொழி, “அப்படி எதுவும் நாங்கள் கேட்கவில்லை. எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.
இதனையடுத்து அடுத்தடுத்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ஆசிரியை, “நீங்கள் (பத்திரிகையாளர்கள்) உள்ளே வாருங்கள் பேசிக் கொள்ளலாம். நன்றாக செயல்படும் இந்தப் பள்ளியில் 1,250 பேர் வரையில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் பெயரை கெடுக்க வேறு யாருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு மணிகண்டன் செயல்படுகிறார். இதனை இவராகவே வாங்கி வந்தார்.