ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிராமங்களான பள்ளிபாளையம், பச்சாம்பாளையம் ஆகிய பகுதிகளில் சீராக குடிநீர் வழங்குவதில்லை மற்றும் கடந்த மூன்று மாதங்களாக வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவது போதுமானதாக இல்லை. இதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதி கிராம மக்கள் அந்தியூர் - மேட்டூர் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியல்! - அந்தியூர்
ஈரோடு : அந்தியூர் அருகே உள்ள கிராமப்பகுதிகளில் சீராக குடிநீர் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் திடீரென காலிக் குடங்களுடன் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலைமறியல்
மேலும் இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.