ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஜவுளிச் சந்தை வளாகம், வணிக வளாகம், பூங்காக்கள், சாலைகள் ஆகியவை அமைக்கப்பட்டுவருகின்றன.
ஆர்.கே.வி. சாலைப் பகுதியில் நடைபெற்றுவரும் இந்தப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகளவு ஏற்படுவதாகவும் ஜின்னா வீதியை அடைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜின்னா வீதியைச் சேர்ந்த மக்கள், மாநகராட்சி அலுவலர்களை முற்றுகையிட்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி வீதியை அடைத்தது கண்டிக்கத்தக்கது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.