ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
அதேபோல் 2019 டிசம்பர் 26ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுவந்தன. 6ஆம் தேதி சந்தனகாப்பு அலங்காரம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சந்தனக்காப்பு அலங்கார தரிசனம் நடைபெற்றது, தொடர்ந்து 8ஆம் தேதி மாவிளக்கு பூஜை, குண்டம் திறப்பு பொங்கல் வைத்தல், படைக்கலம் எடுத்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வான 9ஆம் தேதியான நேற்று காலை அம்மையழைத்தலைத் தொடர்ந்து குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முதலில் தலைமை பூசாரி லோகநாதன் குண்டம் இறக்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து கோயில் பூசாரிகள், ஆண்கள், பெண்கள் என லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி கொண்டத்துக்காளியம் அருள்பெற்றனர்.
பாரியூர் கோயில் குண்டம் திருவிழா தீக்குண்டம் இறங்க 15 நாள்கள் கடும் விரதமிருந்து மூன்று நாள்களுக்கு முன்பிருந்தே வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தீக்குணடம் இறங்கினர். இவ்விழாவிற்கு ஈரோடு, கரூர், கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டிய சமத்துவ பொங்கல்