ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். அக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில், கரோனா வைரஸ் பரவல் தடுப்புக் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா எதிரொலி: பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா ஒத்திவைப்பு - Pannari Mariamman Gundam festival postponed
ஈரோடு: கரோனா எதிரொலியாக பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் எஸ். கதிரவன் தெரிவித்தார்.
erode-pannari-mariamman
இதனால், குண்டம் திருவிழா நடத்துவது குறித்து கோயில் நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் எஸ். கதிரவன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, பொதுமக்களின் நலன்கருதி வரும் 23ஆம் தேதி நடைபெறவிருந்த குண்டம் திருவிழா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல்: பண்ணாரி அம்மன் கோயிலில் கிருமிநாசினி தெளிப்பு