ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தமுள்ள 15 இடங்களில் 9 இடங்களை திமுக கூட்டணியும், 6 இடங்களை அதிமுக கூட்டணியும் கைப்பற்யிருந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு திமுக சார்பில் இளங்கோவன் போட்டியிட்டார்.
திமுகவின் மற்றொரு பிரிவைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரும் அவரை எதிர்த்துப் போட்டியிட்டார். இதில் திமுக போட்டி வேட்பாளர் சின்னச்சாமிக்கு ஆதரவாக அதிமுகவினர் 6 பேர் வாக்களித்தனர். மறைமுகத் தேர்தலில் திமுக வேட்பாளர் இளங்கோவன் 8 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். திமுக போட்டி வேட்பாளர் சின்னச்சாமி 7 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
மறைமுகத் தேர்தலில் தோல்வியடைந்த திமுக போட்டி வேட்பாளரின் ஆதரவாளர்கள் இந்த வெற்றியை எதிர்த்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திமுக வெற்றியைக் கொண்டாடுவதற்கு ஈரோடு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு காரில் வருகை தந்தார். அப்போது திமுக போட்டி வேட்பாளரின் ஆதரவாளர்கள், மாவட்ட செயலாளரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி கோஷமிட்டதால் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக, காங் வெற்றி