தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு தாய்மை அறக்கட்டளையின் தாயுள்ளம் - ஆதரவற்றோரை பாதுகாத்து பராமரிப்பு! - ஈரோடு தாய்மை அறக்கட்டளையின் தாயுள்ளம்

ஈரோடு: சாலைகளில் ஆதரவற்று இருப்பவர்களை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று அழைத்துச் சென்று உணவு, இருப்பிடம் கொடுத்து பாதுகாத்துவருகின்றனர் தாய்மை அறக்கட்டளையினர்.

தாய்மை அறக்கட்டளையின் தாயுள்ளம்
தாய்மை அறக்கட்டளையின் தாயுள்ளம்

By

Published : Apr 26, 2020, 9:27 AM IST

கரோனா வைரஸ் தாக்கம் தமிழ்நாட்டில் வெகுவேகமாகப் பரவிவருவதைத் தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தாய்மை அறக்கட்டளை என்னும் தன்னார்வ அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் சாலைகளில் ஆதரவற்று இருப்பவர்களை விருப்பத்தின்பேரில் அழைத்துச் சென்று ஈரோடு திண்டல்மலை, செங்கோடம்பாளையம், வீரப்பம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் தங்கவைத்துள்ளனர்.

தாய்மை அறக்கட்டளையின் தாயுள்ளம்

அவர்களை தினமும் குளிக்கவைத்து தூய்மைப்படுத்தி உணவு வழங்குகின்றனர். மேலும் அப்பள்ளிகளையும் வண்ணம் பூசி தூய்மைப்படுத்தி அழகாக வைத்துள்ளனர். இவர்கள் காட்டும் அன்பால் குடிப்பழக்கத்தில் இருப்பவர்கள்கூட அதை நினைக்காமல் மனதைக் கட்டுப்படுத்தி மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தென்காசியில் நாளை முழு ஊரடங்கு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details