தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் சிஏஏவிற்கு எதிராக 3ஆவது நாளாக இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் - muslims protest sella bhazha street

ஈரோடு: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

caa
caa

By

Published : Feb 24, 2020, 10:48 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஈரோட்டில் இஸ்லாமியர்கள் மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு செல்லபாட்சா வீதியில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில், ’ஷாஹின் பாக்’ என்ற தலைப்பில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை திரும்பப் பெறும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நாள்தோறும் பல்வேறு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:வன்முறையில் முடிந்த சிஏஏவுக்கு எதிரான போராட்டம்: டெல்லியில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details