தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பீகார் இளைஞரை கொலை செய்த தம்பதி: ஈரோட்டில் பயங்கரம் - பீகார்

ஈரோடு: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்ற இளைஞரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த பீகாரைச் சேர்ந்த நிதிஷ்குமார்-சசி தம்பதியினரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

erode

By

Published : Apr 10, 2019, 10:00 AM IST

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதீஷ் குமார்-சசி தம்பதியினர் ஈரோடு ராசாம்பாளையம் அடுத்த முத்துமாணிக்கம் நகர் பகுதியில் கடந்த ஏழு மாதங்களாக வாடகை வீட்டில் தங்கி, சாய ஆலையில் கூலி வேலை செய்துவந்துள்ளனர். இவர்கள் சொந்த ஊரான பீகாருக்கு அடிக்கடி செல்லும்போது ரயிலில் அதே மாநிலத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்ற இளைஞர் பழக்கமாகியுள்ளார். பின்னர் நவீன்குமாரும் இவர்கள் வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நிதிஷ்குமாரும்-சசியும் தீடீரென நவீன்குமாரின் பெற்றோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. நவீன்குமாரின் பெற்றோர் இதுகுறித்து பீகார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் நிதிஷ்-சசி தம்பதியை தேடி காவல்துறையினர் ஈரோட்டுக்கு வந்தனர்.

இதனிடையே நிதிஷ்குமார்-சசி தம்பதி நவீன்குமாரை இரும்புகளை துண்டாக்க பயன்படும் ஆக்சா பிளேடு மூலம் தலை, கை, கால், இடுப்பு பகுதி என துண்டுதுண்டாக வெட்டி சாக்குப் பையில் போட்டு மூட்டைக் கட்டி வைத்துவிட்டனர்.

பீகார் காவல்துறையினர் தமிழ்நாடு காவல்துறையினர் உதவியுடன் வந்து அப்பகுதியில் விசாரணை செய்து நிதிஷ்குமார்-சசி வீட்டில் சோதனை செய்தபோது நவீன்குமாரை கொலை செய்து மூட்டைகட்டி வைத்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக நிதிஷ்குமார், சசி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், நவீன்குமார் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details