ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரியமொடச்சூர் பகுதியில் மேரி(45) என்பவர் தள்ளுவண்டிக்கடையில் துணி வியாபாரம் செய்துவந்தார். கணவர் தமிழ்தாசன் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மேரிக்கு ஐந்து மகள்களில் இரண்டு பேருக்கு திருமணமான நிலையில் மூன்று பேர் தனியார் நூற்பாலையில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு மேரி வீட்டுக்கு மகள் அன்னமேரி மற்றும் மருமகன் புஷ்பராஜ் வந்தனர். அவர்கள் வெளியே நின்று பேசிகொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மேரியிடம் கடைசி மகளை திருமணம் செய்து தர மறுக்கிறாயா என கேட்டு அரிவாளால் வெட்டியுள்ளனர்.