தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கலாம்: அமைச்சர்

ஈரோடு: மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கலாம்
மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கலாம்

By

Published : Jan 29, 2020, 7:40 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நம்பியூர் ஒன்றியத்தில் நம்பியூர், குருந்தூர், கூடக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரத்தில் கூடுதலாக சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என பரவும் தகவல் தவறானது. பள்ளியின் பாட நேரத்தில் மட்டுமே சிறப்பு வகுப்புகள் நடைபெறும்" என்றார்.

மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கலாம்

மேலும், மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கலாம். பருவத் தேர்வு முறை ரத்தாவது குறித்து பல்வேறு கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன என்று கூறிய அவர், அரசு இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கருப்பணனின் 'பொறுப்பற்ற' பேச்சுக்கு 'பொறுப்பான' பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details