ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள மேவாணியில், தர்மசாஸ்தா ஆலய ஆராட்டுப் பெருவிழா மற்றும் மஹா புஷ்பாபிஷேகவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இந்தாண்டும் ஆலய ஆராட்டுப் பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
35ஆவது ஆண்டாக கொண்டாடப்பட்ட இவ்விழாவில் தர்மசாஸ்தா கோயிலிலிருந்து ஐயப்பன் திருவுருவச் சிலை மேவாணி பகுதியில் ஓடும் பவானி ஆறுக்கு செண்டை மேளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஆற்றில் நீராடல் செய்து நதி கரையோரத்தில் மங்கள இசை முழங்க பசு குதிரை ஆகியவை புடை சூழ பல்வேறு மூலிகைப்பொருட்கள் மற்றும் மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.