ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே துடுப்பதியைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி மகன் பிரவீன்குமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மைதிலி என்பவருக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 100சவரன் நகை உள்ளிட்டவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை - கணவருக்கு 2 ஆண்டுகள் சிறை - erode dowry case husband get two year punishment
ஈரோடு: வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு மீண்டும் பணம்,நகை கேட்டு பிரவீன்குமார் குடும்பத்தினர் மைதிலியை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த மைதிலி கடந்த 2014ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொணடார். இதுகுறித்து மைதிலியின் பெற்றோர் பிரவீன்குமார் மீது ஈரோடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி மாலதி, பிரவீன்குமாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
TAGGED:
வரதட்சனை கொடுமை