ஈரோடு மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் பேரோடு கிராம ஊராட்சிக்குட்பட்ட ஒன்றாவது வார்டில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் சரஸ்வதி மற்றும் மாராத்தாள் ஆகியோர் தலா 94 வாக்குகள் பெற்றனர்.
ஈரோட்டில் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு! - ஈரோடு உள்ளாட்சித் தேர்தல் முடிவு
ஈரோடு: ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒன்றாவது வார்டு பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்கள் சமமான வாக்குகளைப் பெற்றதால் குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குலுக்கல் முறையில் தேர்வான வாக்காளர்
இதனால், இருவர் பெயர்களும் சீட்டில் எழுதப்பட்டு குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார். இதில் மாராத்தாள் பெயர் வந்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திமுகவின் வெற்றியைத் தடுக்க அதிமுக அரசு சதி!